மதுரை திருப்பரங்குன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில், கடந்த 1994 – 98ம் ஆண்டு வரை கல்வி பயின்ற மாணவர்கள், இக்கல்லூரி வளாகத்தில், ஒன்று சேர்ந்து தங்களுடைய மலரும் நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டதுடன் , தங்கள் குடும்பத்தினர்கள் அனைவரும் பங்கு கொண்டு மகிழ்ந்து கொண்டாடினார்கள்.
இவ்விழாவில், இம்மாணவர்கள் அனைவரும் சேர்ந்து திரட்டிய ரூபாய் 35 லட்சத்திற்கான காசோலையை கல்லூரி நிர்வாகத்திடம் வழங்கினார்கள் இதனை, ஏழை மாணவர்களின் கல்வி நலனுக்காக பயன்படுத்த வேண்டுகோள் விடுத்தனர். இன்று ஒன்று சேர்ந்த மாணவர்கள் 250 பேரும் குரூப் போட்டோவை உற்சாகமாக எடுத்து மகிழ்ந்தார்கள்.