Connect with us

Tamil Nadu

கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்தின் கலை மற்றும் அரசியல் சேவையை பாராட்டி அவருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருதை அறிவித்துள்ளது. இதனிடையே, கடந்த மாதம் நடைபெற்ற விழாவில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் எனத் தெரிவித்த நிலையில் அவரது பெயர் அன்றைக்கு அறிவிக்கப்படவில்லை என எதிர்ப்பு கிளம்பிய நிலையில், விஜயகாந்துக்கு இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து, டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, அவரது சகோதரர் சுதிஷ் உள்ளிட்டோர் நேற்று மாலை டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டனர்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது. கேப்டனுக்கு வழங்கப்படும் பத்மபூஷனை பெற்றுக் கொண்டு, நாங்கள் நேராக சென்னை வந்து கேப்டனின் கோயிலுக்கு (தேமுதிக தலைமை அலுவலகம்) தான் முதலில் அதை கொண்டு செல்லப் போகிறோம் என பிரேமலதா விஜயகாந்த் உருக்கமாக பேசினார்.

Continue Reading
Advertisement

More in Tamil Nadu

Advertisement
Advertisement
Advertisement
To Top