த‌மிழக‌ம்

புயல் அப்டேட்: கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

Published on

     வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மண்டல மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

’’வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இந்த நிலையில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 780 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று டிசம்பர் 3 ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேலும், பின் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே 4 ஆம் தேதி புயலாக கரையை கடக்க கூடும் எனவும், இதனால் டிசம்பர் 3 ஆம் தேதி சென்னை முதல் கடலூர் வரையிலான கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத்’’  தெரிவித்துள்ளார்.

Comments

Exit mobile version