மதுரை : தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சார்பில் சென்னையில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடந்தது. இதில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மதுரை மாநகராட்சி நீச்சல் அணியில் உள்ள அன்னபூர்ணிமா பங்கேற்றார். 800 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் இரண்டாம் இடம், 400 மீட்டர் ஐ.எம். பிரிவில் மூன்றாம் இடம் பெற்றார்.
அடுத்த மாதம் ஒடிசா தேசிய நீச்சல் போட்டியில் தமிழக அணி சார்பாக பங்கேற்கும் தகுதி பெற்றார். பயிற்சியாளர்கள் சதீஷ் பாண்டியன், வெங்கடேஷ் பாராட்டினர்.