மற்ற செய்திகள்

வானிலை எச்சரிக்கை :11 மாவட்டங்களில் கனமழை

இன்னும் சில மணி நேரங்களில் தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Published on

இன்னும் சிறிது நேரங்களில் தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்னும் சில மணிநேரங்களில் தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்னும் சில மணி நேரங்களில் கன மழை பெய்யும் மாவட்டங்கள் பெயர்கள் பின்வருமாறு: திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் 

சென்னையில் இன்று மாலை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

- செய்திகள்

Exit mobile version