மற்ற செய்திகள்

இலவசமாக எதையும் வழங்கக்கூடாது-‘ இன்போசிஸ்’ நாராயண மூர்த்தி

Published on

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்றுப் பேசய , இன்போசிஸ் நாராயண மூர்த்தி  இலவசமாக, எதையும் வழங்கக்கூடாது, என்று, கூறியுள்ளார்.

 

இந்தியாவைச் சேர்ந்த பிரபல, ஐடி நிறுவனம், இன்போசிஸ் இந்த நிறுவனத்தில், பல ஆயிரம் பேர்…பணியாற்றி வருகின்றனர். இன்போசிஸ் நிறுவனர்  நாராயண மூர்த்தி அவ்வப்போது கருத்துகள் கூறி வருவது இணையதளத்தில் பேசு பொருளாகி வருகிறது. சமீபத்தில்’ இளைஞர்கள், வாரம் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்’ என கருத்துக் கூறியிருந்தார்,

இது பேசு பொருளான நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், ”இலவசமாக, எதையும் வழங்கக்கூடாது ”என்று,கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ”அரசின் இலவச திட்டங்கள் பற்றி அதிருப்தி கூறிய அவர்,

அரசாங்கத்திடம் இருந்து மானியம் பெறும் மக்கள், இதற்குப் பிரதிபலமான. சமூகத்திற்கு, எதையாவது திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும், ”இலவசங்கள் வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை. நானும், எளிமையான குடும்பல் பின்னணியில் இருந்து வந்தவன் தான். இலவச மானியங்களை பெற்றவர்கள். தங்கள் சந்ததியினரின் எதிர்காலம் சிறப்பாக இருப்பதற்குரிய பொறுப்பேற்க வேண்டும் ”என்று நான் எதிர்பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Comments

Exit mobile version