7 மாத கைக்குழந்தையை கடித்து கொன்ற தெருநாய்கள்: அதிர்ச்சி சம்பவம்!
7 மாத கைக்குழந்தையை தெரு நாய்கள் கடித்து குதறி கொன்ற அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது
கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல பகுதிகளில் தெருநாய்கள் குழந்தைகள் உள்பட மனிதர்களை கடித்து குதறி வருகிறது
அந்த வகையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் 7 மாத கைக்குழந்தையுடன் கூலித்தொழிலாளி தம்பதிகள் வேலைக்கு வந்துள்ளனர். குழந்தையை பணி நடைபெறும் பகுதியில் தூங்க வைத்துவிட்டு வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென அந்த பக்கம் வந்த தெருநாய்க்கூட்டம் ஏழு மாத கைக்குழந்தையை கடித்து குதறியது
இதனால் படுகாயமடைந்த அந்த குழந்தையை பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை மரணம் அடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் கதறி அழுத காட்சியை பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது