மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை: சென்செக்ஸ் 59,000ஐ தாண்டியதால் மகிழ்ச்சி!
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை திடீரென சுமார் 600 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் சற்று முன் மும்பை பங்குச்சந்தை தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 590 புள்ளிகள் வரை உயர்ந்து 59003 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 169 புள்ளிகள் உயர்ந்து 17480 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்கு சந்தை சென்செக்ஸ் இன்று 59000ஐ தாண்டியுள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தீபாவளி நெருங்கி வருவதை அடுத்து பங்குச்சந்தை உயர்ந்து வருகிறது என்பதும் தீபாவளிக்கு பின்னரும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
Edited by Siva
- செய்திகள்