ஜெயலலிதா மரணத்தில் சசிகலா குற்றம் செய்தவர்: சட்டசபையில் ஆணையின் அறிக்கை!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சசிகலா குற்றம் செய்தவர் என்று ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்திருப்பதாகவும் ஆறுமுகசாமி ஆணையம் அவர் மீது விசாரணை செய்ய பரிந்துரை செய்ததாகவும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆணைய அறிக்கையில் தகவல் தெரிவிப்பதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது என்பதும், இந்த ஆணையம் ஒரு சில ஆண்டுகளாக விசாரணை செய்து சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை அறிக்கையில் ஜெயலலிதா மரணத்தில் சசிகலா, விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், சிவகுமார் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்கிறது என்றும் எனவே அவர்கள் மீது விசாரணைக்கு பரிந்துரைத்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
Edited by Siva
- செய்திகள்