Connect with us

மற்ற செய்திகள்

குளிர்பானத்தில் ஆசிட் ஊற்றிக் கொடுத்த மாணவன் பலி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு மாணவனுக்கு சக மாணவன் குளிர்பானத்தில் ஆசிட் ஊற்றிக் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
 


கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு மாணவனுக்கு சக மாணவன் குளிர்பானத்தில் ஆசிட் ஊற்றிக் கொடுத்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகேயுள்ள மெதுகும்மல்  நுள்ளிக்காடு என்ற பகுதியி வசிப்பவர் சுனில். இவரது மகன் அஸ்வின்(11). அனங்குள்ள தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 24 ஆம் தேதி இவர் பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அடுத்த நாள் அஸ்வினுக்கு காய்ச்சல் ஏற்படவே, அவரை பெற்றோர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அஸ்வின் ஆசிட் திரவம் சாப்பிட்டதால்  இரு சிறு நீரகங்களும் பழுதடைந்துள்ளதாக கூறியதைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் நிலைய்ய்ல், மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மாணவரின் உறவினர்கள் பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம் செய்வதாக தெரிவித்துள்ளளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj


- செய்திகள்

Continue Reading
Advertisement
You may also like...

More in மற்ற செய்திகள்

Advertisement
Advertisement
Advertisement
To Top