Connect with us

மற்ற செய்திகள்

ஒரே நாளில் 1,542 பாதிப்புகள்; 8 பேர் பலி! – இந்திய கொரோனா நிலவரம்!

கடந்த சில நாட்களாக இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த தினசரி பாதிப்புகள் தொடர்ந்து 3,000-குள் இருந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த தினசரி பாதிப்புகள் தொடர்ந்து 3,000-குள் இருந்து வருகிறது.



இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,542 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,32,430 ஆக குறைந்தது. புதிதாக 08 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,913 ஆக உயர்ந்தது.

நாட்டில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,40,77,068 ஆக உயர்ந்துள்ளது.  நாட்டில் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 26,449 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் 2,19,37,66,738 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 4,23,087 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
 
Edited By: Sugapriya Prakash

- செய்திகள்

Continue Reading
Advertisement
You may also like...

More in மற்ற செய்திகள்

Advertisement
Advertisement
Advertisement
To Top