மற்ற செய்திகள்

ரூ.40 குறைந்த பெட்ரோல் விலை: எங்கு தெரியுமா?

இலங்கை அரசு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையை கணிசமாக குறைத்துள்ளது.

Published on

இலங்கை அரசு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையை கணிசமாக குறைத்துள்ளது.



இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பெட்ரோல் மற்றும் டீசல், மண்ணெண்ணெய் உட்பட எரி பொருள்களின் விலை விண்ணை முட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இலங்கையின் வருடாந்திர பணவீக்க விகிதம் 70% நெருங்கியுள்ளது. இருப்பினும் இலங்கை அரசு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையை குறைக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. ஆம், நேற்று நள்ளிரவு பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது.
இதன் விவரம் பின்வருமாறு…
  1. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.40 குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் ரூ.370க்கு விற்பனையாகிறது.
  2. 92 ரக பெட்ரோல் விலை ரூ.40 குறைக்கப்பட்டு, ஒரு லிட்டர் ரூ.370 க்கு விற்பனையாகிறது.
  3. ஆட்டோ டீசல் விலை ரூ.15 குறைக்கப்பட்டு, ஒரு லிட்டர் ரூ.415 க்கு விற்பனையாகிறது.

கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு 9.2% சுருங்கும் என்று உலக வங்கி கணித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
Edited By: Sugapriya Prakash

- செய்திகள்

Exit mobile version