பிரதமர் மோடி பாலியல் குற்றவாளிகளுடன் துணை நிற்கிறார்: ராகுல் காந்தி
பிரதமர் மோடி பாலியல் குற்றவாளிகளுடன் துணை நிற்கிறார் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் கோத்ரா கலவரத்தின்போது பில்கிஸ் பானு என்பவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை குஜராத் அரசு ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுவித்தது
இந்த குற்றவாளிகள் 11 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறுகையில் செங்கோட்டையிலிருந்து பெண்களுடைய மதிப்பு குறித்து பேசுகிறார்கள், ஆனால் உண்மையில் அவர்கள் பாலியல் குற்றவாளிகளுடன் துணை நிற்கிறார்கள்
குறிப்பாக பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிக்கு அவருடைய நோக்கத்திற்கும் உள்ள வித்தியாசம் தெளிவாக தெரிகிறது. பெண்களை பிரதமர் மோடி ஏமாற்றியுள்ளார் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.