மற்ற செய்திகள்

ஈரான் சிறையில் தீ விபத்து…4 பேர் பலி

ஈரான் நாட்டில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் கைதிகளுக்கு இடையே நடந்த மோதல் மற்றும் தீ விபத்தில் 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.

Published on


ஈரான் நாட்டில் உள்ள சிறைச்சாலை  ஒன்றில் கைதிகளுக்கு இடையே நடந்த மோதல் மற்றும் தீ விபத்தில் 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.

மத்திய கிழக்கு ஆசிய நாடான ஈரானில் அதிபர் இப்ராஹிம் ராஷி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

நாட்டின் தலை நகர் டெஹ்ரானில் புறநகர் பகுதியான எவின் என்ற பகுதியில் உள்ள சிறைச்சாலையில் பல  நூற்றுக்கணக்காக கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இத நிலையில், நேற்று முன் தினம் இங்கு தீ விபத்து ஏற்பட்டது. இதில், சிறையில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அங்குள்ள துணி கிடங்கும் தீ பற்றி மளமளவென பற்றி எரிந்ததாக தெரிகிறது.

இதுகுறிடத்து சிறை அதிகாரிகள் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறை தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.   இந்த தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர்  காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

Edited by Sinoj

- செய்திகள்

Exit mobile version