Connect with us

மதுரை நகரம்

வடக்கம்பட்டி பிரியாணி திருவிழா – முனியாண்டி கோயிலில் திருவிழா கோலம்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடி அருகே உள்ள வடக்கம்பட்டியில் ஸ்ரீ முனியாண்டி சுவாமி கோயில் அமைந்துள்ளது. அந்த கோயிலில் வருடா வருடம் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை பிரியாணி திருவிழா விமர்சையாக நடத்தப்படும்.

இந்த பிரியாணி திருவிழா கடந்த 87 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 88 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒரு வாரம் காப்பு கட்டி விரதம் மேற்கொள்வர்.

அதன்படியே இன்று காலை பக்தர்கள் விரதம் வைத்து, பால்குடம் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.

முன்னதாக நேற்று மாலை நடைபெற்ற விழாவில் கோயில் நிலைமாலையுடன் அவர்களது இல்லங்களில் இருந்து தேங்காய், பழம், பூத்தட்டுகளை எடுத்து வந்து தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்றனர். பின்னர் நிலை மாலையை கோயிலில் வைத்து சுவாமிக்கு தேங்காய் உடைத்து தரிசனம் செய்தனர்.

அந்த விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்துபவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 200ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட சேவல்கள் முனியாசுவாமிக்கு பலியிடப்பட்டு 2500 கிலோ பிரியாணி அரிசியில் அசைவ பிரியாணி தயார்செய்து பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்குவார்கள்.

இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள 25க்கும் மேற்பட்ட கிராமத்தினர் ஆயிரக்கணக்கானோர் இந்த அன்னாதனத்தில் கலந்துகொண்டனர். இந்த விழாவிற்காக தமிழகம் முழுவதும் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல் விடுதிகள் இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படும்.

இந்த நிகழ்ச்சி பற்றி பக்தர்கள் கூறுகையில், முனியாண்டி சுவாமி வணங்கினால் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் நடக்கும். வேண்டுதல் நிறைவேறியதற்காக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடுகள் மற்றும் கோழிகள் பலியிட்டு அசைவ பிரியாணி தயார் செய்து ஜாதி, மத பேதமில்லாமல் அனைவருக்கும் வழங்கும் ஒரு நிகழ்ச்சி.

இந்த பிரியாணியை சாப்பிடுபவர்களுக்கு நோய் நொடிகள் அண்டாது என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் விழாவையொட்டி தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் சிங்கப்பூர், மலேசியா என பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.

இதன் மூலம் இந்த விழாவில் பெண் பார்க்கும் படலமும் நடைபெறும் என பக்தர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த குரோனா காலத்திலும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து முனியாண்டி சுவாமியை தரிசித்ததாக வடக்கம்பட்டி கிராம மக்கள் தெரிவித்தனர்.

Comments

More in மதுரை நகரம்

Advertisement
Advertisement
Advertisement
To Top