பார்க்கிங்கில் நிறுத்த கொடுத்த காரை திருடி சென்றவர் கைது சென்னை சோளிங்கநல்லூரை சேர்ந்த விகாஷ்விஷ்ணு (29) என்பவர் மதுரை குருவிக்காரன் சாலை பகுதியில் உள்ள MP லாட்ஜில் தங்கியுள்ளார். அப்போது லாட்ஜில் எதிரேயுள்ள கார் பார்க்கிங்கில் சொகுசு காரை நிறுத்துவதற்காக பார்க்கிங்கில் வேலை பார்த்த தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த மயில்வாகனன் (33) என்பவரிடம் சாவியை கொடுத்த நிலையில் வாகனத்தை திருடி சென்றதாக விகாஷ் விஷ்ணு அளித்த புகாரின் கீழ் மயில்வாகனனை அண்ணாநகர் காவல்துறையினர் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.