மதுரை: மதுரை தொழில்நுட்ப சங்கம் சார்பில் முதலாவதுதொழில் தீர்வரங்கு சோலமலை பொறியியல் கல்லுாரியில் நடந்தது. ‘கோப்ரூகல்’ நிறுவனர் குமார் வேம்பு துவக்கி வைத்து பேசுகையில், ”மாணவர்கள் உருவாக்கிய தீர்வு இறுதியானது என கருதாமல், அதை மேலும் மெருகேற்ற வேண்டும், ” என்றார்.
மதுரை ஸ்மார்ட சிட்டி திட்ட இயக்குனர் குமாரராஜன் பேசினார். மதுரை, காரைக்குடி, சிவகாசி, தஞ்சாவூர், கோவை, சென்னை கல்லுாரிகளின் 172 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 42 குழுக்களாகபல சமூக பிரச்னைகளுக்குதொழில்நுட்ப தீர்வு அளித்தனர். வெற்றி பெற்ற குழுக்களுக்கு மதுரை தியாகராஜர் மேலாண்மை கல்லுாரி முதல்வர் முரளி சாம்பசிவன், மதுரை எச். சி. எல். , நிர்வாகி திருமுருகன் சுப்பராஜ் பரிசு வழங்கினர். வெங்கடேஷ் பேசினார். ஸ்டார்டப் கிரைன்ட், யங் இந்தியன்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கின.