மதுரை: மதுரை வைகை நதி மக்கள் இயக்கம், முத்தமிழ் நாட்டுப்புறக் கலைகள் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் வைகை நதி பாதுகாப்பு மாநாடு மதுரை சிம்மக்கல் சாரதா பள்ளியில் நடந்தது. வைகை நதி மக்கள் இயக்கம் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜன் தலைமை வகித்தார்.
மாநகராட்சி மேயர் இந்திராணி துவக்கி வைத்து பேசியதாவது: வைகை நாகரீகம் 5000 ஆண்டுகள் பழமையானது. வைகை அருகிலுள்ள 350 கிராமங்களில் அகழாய்வு நடந்தது. 293 கிராமங்களில் தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. வைகையை துாய்மையாக பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் முழு கவனம் செலுத்துகிறது என்றார். வைகையில் பாரம்பரிய முறைப்படி படித்துறைகள் அமைக்க வேண்டும். கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீப வழிபாடு நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ, மதுரை ஆதினம், கண்ணதாசன் நற்பணி மன்ற தலைவர் சொக்கலிங்கம், மதுரைக்கல்லுாரி வாரிய உறுப்பினர் அமுதன், திருக்கோவில் பக்தர்கள் பேரவை துணைத் தலைவர் சுந்தரவடிவேல், சின்மயா மிஷன் சிவயோகானந்தா, தென்னிந்திய பா. பி. , நிறுவனர் திருமாறன், ஆராய்ச்சி நிறுவன நிறுவனர் பாண்டியராஜன், வழக்கறிஞர்கள் ராமகிருஷ்ணன், சோலை பழனிவேல்ராஜன் மற்றும் நேதாஜி சுவாமிநாதன் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சி நடந்தது.