விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிகளுக்கு கடந்த 2022 ஜூன் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்கள்புகைப்படங்களை அவ்வப்போது சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளின் புகைப்படங்களை அவ்வப்போது சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். ஆனால் குழந்தைகளின் முகம் இதுவரை எந்த புகைப்படத்திலும் இல்லாததால், இவர்களை பார்க்க ரசிகர்கள் மிக ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில், தன் மகனுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படம் ஒன்றை ‘தன் உயிர்ஸ்’ என விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.