ஜூலை 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை 8 தமிழ் படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சந்தானம் நடித்த ’டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படம் வெளியாகிறது. பரத். வாணி போஜன் நடித்த ’லவ்’ என்ற திரைப்படம் வெளியாகிறது, இது பரத்தின் 50வது படமாகும். தோனியின் தயாரிப்பில் உருவாகியுள்ள ’எல்ஜிஎம்’ திரைப்படம் ஜூலை 28இல் வெளியாக உள்ளது. இவை தவிர, ‘பீட்சா 3’ ’டைனோசர்’ ’மேலே இருக்கிறவன் பாத்துக்குவான்’ ‘அறமுடைத்த கொம்பு’ மற்றும் ’டெரர்’ ஆகிய படங்களும் வெளியாக உள்ளன.